உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்தைவெளி முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

மந்தைவெளி முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மந்தைவெளி முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது.கடந்த மாதம் 15ம் தேதி தேர்த்திருவிழா துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 27ம் தேதி ஆரியமாலா, காத்தவராயன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நேற்று, தேர் திருவிழாவையொட்டி காலை 8:00 மணிக்கு கோமுகி நதிக்கரையிலிருந்து சக்தி அழைத்தல், 9:00 மணிக்கு காளி கோட்டை இடித்தல் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து 11:00 மணியளவில் முத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின், ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.விழாவில், பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து இன்று மஞ்சள் நீராடுதல், காத்தவராய சுவாமி, கற்பழகி திருமணம் மற்றும் அம்மன் ஊஞ்சலாடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !