உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆடி அமாவாசை : தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆடி அமாவாசை : தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் ஆடி அமாவாமையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

பெற்றோரை இழந்தவர்கள் மற்றும் முன்னோர்களுக்கு ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் இன்று ஆடி மாத அமாவாசையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ஆடி அமாவாசையையொட்டி, சிவகங்கை குளக்கரையில் காலை முதல் ஏராளமானோர் அமர்ந்து, தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் நடராஜர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். புரோகிதர்கள் வரிசையாக அமர்ந்து பொதுமக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளத்தப்பட்ட நிலையில் கடந்த ஆண்டை விட பல மடங்கு கூடுதலாக பொதுமக்கள் கோவிலில் தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !