உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஐந்து கருட சேவை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஐந்து கருட சேவை

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழாவின் ஐந்தாம் நாளான நேற்று காலை பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவில் ஐந்து கருட சேவையும் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு திரு ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் எழுந்தருளினார். பின் பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன், ஆண்டாளுடன் ரங்கமனார் எழுந்தருளினர். பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்து வைத்தார். பந்தலில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோசத்திற்கு மத்தியில் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதைப்போல் இரவு 10:00 மணிக்கு மேல் ஆடிப்பூர பந்தலில் ஐந்து கருட சேவை நடந்தது. ஆண்டாள் அன்ன வாகனத்திலும், ரங்கமன்னார், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன், ஐந்து வருட வாகனங்களிலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளினர். இதனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு புறப்பட்டபோது சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பாகவத பக்தர்களின் நாம சங்கீர்த்தன பஜனை நடந்தது. விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, கோவில் பட்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !