பட்டதரிசி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1251 days ago
பெ.நா.பாளையம்: ஆடி அமாவாசையையொட்டி பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
பெரியநாயக்கன்பாளையம் வண்ணாங்கோவில் பிரிவு அருகே உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையொட்டி நேற்று காலை சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல நரசிம்மநாயக்கன்பாளையம், துடியலூர், சின்னதடாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்கள், சிவன் கோவில்களில் ஆடி அமாவாசையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.