கூவம் திரிபுராந்தக சுவாமி கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ தேரோட்டம்
கூவம் : கூவம் திரிபுராந்தக சுவாமி கோவிலில், நேற்று, ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா தேரோட்டம் நடந்தது.
கடம்பத்துார் ஒன்றியம், கூவம் ஊராட்சியில் உள்ளது திரிபுர சுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில். இந்த கோவிலில், ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா, கடந்த 23ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.திருவிழா காலங்களில் தினமும், காலை 8:00 மணி மற்றும் இரவு 7:00 மணிக்கு சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று, காலை 9:50 மணியளவில் நடந்தது. தேரில் எழுந்தருளிய திரிபுராந்தக சுவாமி முக்கிய வீதிகள் டிராக்டர் மூலம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து பின் கோவில் வந்தடைந்தார்.வரும் ஆக 1ம் தேதி, திருக்கல்யாண வைபவமும் சிறப்பாக நடைபெற உள்ளது என, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்துள்ளனர்.