பத்ரகாளியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
ADDED :1180 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வணிகர் வீதி அருகில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில், புதிதாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, கடந்த மாதம் 9ல், கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. அதைத் தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதில், நிறைவு நாளான நேற்று முன்தினம் மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது. இதில், காலையில் மூலவர் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் பத்ரகாளியம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார்.