சிவன் கோவில் கட்டுமானம் நிதி இல்லாமல் தொய்வு
ADDED :1181 days ago
ஸ்ரீபெரும்புதுார்: பென்னலுார் கிராமத்தில், சிவன் கோவில் புனரமைப்பின் கட்டுமான பணிகள், நிதி இல்லாததால் தொய்வடைந்து உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பென்னலுார் ஊராட்சியில், அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறையால் கைவிடப்பட்டு இருந்த இந்த கோவில் பராமரிப்பின்றி, இடிந்து விழுந்து, புதர் மண்டி காணப்பட்டது.கிராம மக்கள், சிவனடியார்கள் நன்கொடையுடன், கோவிலை புனரமைக்கும் பணி, 2017ல் துவங்கியது. கோவில் மண்டபம், சன்னிதிகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. வர்ணம் திட்டும் பணிகள் நடந்து வருகின்றன.கோவிலின் மூன்று நிலை ராஜகோபுரம், சுற்றுச்சுவர், தரைத் தளம் ஆகியவற்றை அமைக்கும் பணிகளுக்கு, நிதி இல்லாததால், இறுதி கட்டுமான பணிகள் தொய்வடைந்து உள்ளது.