உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயில் அறங்காவலர் குழுவினர் பதவி ஏற்பு

பழநி கோயில் அறங்காவலர் குழுவினர் பதவி ஏற்பு

பழநி: பழநி கோயில் நிர்வாகத்திற்கு நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழுவினர் பதவி ஏற்று கொண்டனர்.

பழநி கோயில் நிர்வாகத்திற்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது. அதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன், சென்னையை சேர்ந்த சந்திரமோகன், திண்டுக்கல் சேர்ந்த ராஜசேகரன், மணிமாறன், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சத்யா ஆகிய ஐந்து பேர் நியமிக்கப்பட்டனர் இவர்கள் நேற்று காலை பழனி கோயில் அலுவலக உலக கூட்ட அரங்கில் பதவி ஏற்று கொண்டனர். அதன் பின் மறைமுக தேர்தல் மூலம் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிகழ்வின் போது திண்டுக்கல் மண்டல ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், உதவி ஆணையர் லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் பேசுகையில், "பழநி கோயில் பக்தர்கள் தரிசனம் எளிமையாக்கப்படும். கோயில் கும்பாபிஷேகம், இரண்டாவது ரோப் கார் பணி, வின்ச் பழுது, கோயில் பணியாளர்கள் நியமனம் ஆகியவை குறித்து ஹிந்து அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனைகளுடன் நடைமுறைப்படுத்தப்படும்." என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !