எல்லையம்மன் கோவிலில் 1,008 பால்குட ஊர்வலம்
பூந்தமல்லி : பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் உள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலில், 1,008 பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது.பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் பிரசித்திப் பெற்ற ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதத்தை முன்னிட்டு, இக்கோவிலில், 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டு, 27ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, ஏழாம் நாளான நேற்று, 1,008 பால்குட ஊர்வலம் நடந்தது.பெண் பக்தர்கள், காட்டுப்பாக்கத்தில் உள்ள வேம்புலி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து, ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.வெயிலின் தாக்கம் குறையவும், விவசாயம் தழைக்கவும், நோய் தாக்கத்திலிருந்து மக்கள் விடுபடவும் இந்த பால்குட ஊர்வலம் நடந்தது. இதில், பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.