பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி தீர்த்தவாரி விழா
ADDED :1504 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி அமாவாசை தீர்த்தவாரி விழா நடந்தது.நேற்று காலை 9:30 மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கோயில் வளாகத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. பின்னர் சிறப்பு அபிஷேகங்கள் நடந்து பெருமாள் ரத வீதிகளில் வலம் வந்தார். தொடர்ந்து கோயிலை அடைந்த பெருமாளுக்கு சிறப்பு தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதே போல் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில், அனுமார் கோதண்டராமர் சுவாமி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களையும் ஆடி தீர்த்தவாரி உற்சவ விழா நடந்தது.