ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம்
அவிநாசி: ஆடி அமாவாசையை முன்னிட்டு லிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அவிநாசியில், ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பாடல் பெற்ற தலமானதும், காசியில் வாசி அவிநாசி என போற்றுதலுக்குரிய சிறப்புமிக்க பழமையான திருத்தலும் ஆகும் .நேற்று ஆடி அமாவாசை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இந்நிலையில், அமாவாசை நாளை முன்னிட்டு சிவாலயத்தில் பக்தர்கள் தங்களது தோஷங்களை கழிக்க வந்திருந்தனர். இதனையடுத்து, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் வரிசையில் நின்று வருவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை முதல் மாலை வரை பக்தர்கள் கூட்டத்தினால் கோவில் வளாகம் மக்கள் கூட்டத்தினால் நிரம்பி வழிந்து காட்சியளித்தது. இந்நிலையில், பக்தர்கள் கோவிலுக்குள் வந்து செல்லும் வழி எங்கும் டூவீலர் மற்றும் கார்கள் நிறுத்தி வழிபடச் சென்றதால் கோவில் வளாகத்தில் கடும் வாகன நெருக்கடி ஏற்பட்டது. பக்தர்கள் கோவிலை விட்டு வெளியேற பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.