சதுரகிரிக்கு வாழைத்தோப்பு வழியாக சென்ற பக்தர்கள்
ADDED :1179 days ago
எழுமலை: ஆடி அமாவாசையை முன்னிட்டு சாப்டூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு எழுமலை சுற்று வட்டார பக்தர்கள் டி.கிருஷ்ணாபுரம் அருகே மலையடிவாரத்தில் உள்ள வாழைத்தோப்பு வழியாக சதுரகிரி மலைக்கு செல்கின்றனர். மலையடிவாரத்தில் உள்ள வழிகாட்டும் கருப்பசுவாமி கோயிலில் வழிபாடு நடத்தி காத்தாடி மேடு, குளிராட்டி வழியாக உள்ள பாதை சற்று ஏற்றத்துடன் கடினமான பாதையாக உள்ளது. இருப்பினும் ஆண்டு தோறும் ஆடி அமாவாசை தினத்தில் ஏராளமான பக்தர்கள் இந்த வழியாக சதுரகிரி மலைக்கு சென்று சுந்தர, சந்தன மகாலிங்கம் கோயிலில் வழிபாடு செய்தனர். இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் வாழைத்தோப்பு பகுதியில் ரோடு குறுகியதாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சிரமப்பட்டு போக்குவரத்தை சீர்படுத்தினர்.