மழை வேண்டி மண்பானையில் தீர்த்தம் எடுத்த பக்தர்கள்
ADDED :1175 days ago
மேலூர்: மேலுார், சூரக்குண்டு காளி கருப்பு கோயில் திருவிழாவை முன்னிட்டு மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி பக்தர்கள் 21 நாட்கள் விரதமிருந்தனர் கருப்பு கோயிலில் இருந்து பக்தர்கள் 2 கி.மீ., தொலைவில் உள்ள காளி கோயிலுக்கு ஊர்வலமாக சென்று அங்கிருந்து 600 க்கும் மேற்பட்ட மண் பாணைகளில் பொங்கல் வைப்பதற்கான தீர்த்தத்தை கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து 350 க்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி பொங்கல் வைத்து சாமி கும்பிட்டனர். இத் திருவிழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.