பெரியபாளையத்து அம்மனுக்கு பக்தர்கள் பால் குட ஊர்வலம்
ADDED :1170 days ago
திருப்போரூர் : தண்டலம் பெரியபாளையத்தம்மன் கோவிலில், ஆடி திருவிழாவை முன்னிட்டு நேற்று, பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.திருப்போரூர் அடுத்த, தண்டலம் கிராமம் பெரியபாளையத்தம்மன் கோவிலில், 28ம் ஆண்டு ஆடி தேர் திருவிழா நாளை நடக்கிறது.
இதை முன்னிட்டு, நேற்று காலை 9:30 மணிக்கு, தண்டலம் ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து, பால்குடம் எடுத்து பக்தர்கள் புறப்பட்டனர்.முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்து, காலை 10:00 மணிக்கு, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு, ஊரணி பொங்கல் வைத்தல், காப்பு கட்டுதல், அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.நாளை மதியம் 2:00 மணிக்கு கூழ்வார்த்தல், மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை மற்றும் இரவு 10:00 மணிக்கு அம்மன் தேர் வீதியுலா நடக்கிறது.