உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவில் விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்

திரவுபதி அம்மன் கோவில் விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, திரவுபதி அம்மன் கோயில் விழா, நேற்று காப்பு கட்டுகளுடன் துவங்கியது. காப்பு கட்டுதல் முன்னிட்டு மூலவருக்கு, 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், பக்தர்கள் ஏராளமான கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் தொடர்ச்சியாக தினமும் இரவில், சக்தி கரகம், தருமர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு நடைபெற்று, ஆக.8 ல் மூலவர் திரௌபதி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று, முக்கிய விழாவான, பூக்குழி விழா ஆக.19 ல் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆக. 23 ல் நடைபெறும் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை ஆர்.எஸ்.மங்கலம் இந்து சமய மன்றத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !