உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளி அன்னூர் அம்மன் கோவில்களில் கோலாகலம்

ஆடி வெள்ளி அன்னூர் அம்மன் கோவில்களில் கோலாகலம்

அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு, நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

நாரணாபுரம், ஊராட்சி, வடுக பாளையம், பேச்சியம்மன், அங்காளம்மன் கோவிலில் ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமை பூஜை நேற்று நடந்தது. திரளான பெண்கள் அம்மன் பாடல்கள் பாடி மனம் உருகி வேண்டி சென்றனர், அங்காளம்மன் கையில் உள்ள குடத்தில் இருந்து பால் ஊற்றுவது போல் தத்துரூபமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அன்னூர், ஓதிமலை ரோடு, பெரிய அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. அம்மனுக்கு, அலங்கார பூஜை, அபிஷேக பூஜை நடந்தது. அன்னூர், தென்னம்பாளையம் ரோடு, மாரியம்மன் கோவிலில், அம்மன் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார், பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில், கணேசபுரம் புற்று கண் மாரியம்மன் கோவில், குன்னத்தூர் மாரியம்மன் கோவில், எல்லப்பாளையம் சௌடேஸ்வரி அம்மன் கோவில், கோவில்பாளையம் கவைய காளியம்மன் கோவில் என அன்னூர் தாலுகாவில் உள்ள அம்மன் கோவில்களிலும் மன்னீஸ்வரர் கோவிலில் அம்மன் சன்னதியிலும், கஞ்சப்பள்ளி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலிலும், ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !