உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

கூடலுார்: ஆடி வெள்ளி இரண்டாவது வாரத்தை முன்னிட்டு கூடலூரில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. கூடல் சுந்தரவேலவர் கோயிலில் சர்வ அலங்காரத்தில் மகாலட்சுமி அம்மன் அருள் பாலித்தார். அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. விவசாயம் செழிக்கவும், உடல் நலத்தை பாதுகாக்கவும் கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. துர்க்கை அம்மன் கோயில், காளியம்மன் கோயில், செல்வ காளியம்மன் கோயில், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !