வேட்டையன்பட்டியில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம்
ADDED :1169 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டியில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
இங்குள்ள காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடித்திருவிழா ஜூலை 25ம் தேதி கொடியேற்றுடன் தொடங்கியது. ஜூலை 29 ல் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி அன்றிரவு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி அருள் பாலித்தார். பெண்கள் ஆரத்தி எடுத்து அம்மனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆக.1ல் பால்குடம் எடுத்தல் பூத்தட்டு எடுத்தல் நடக்கிறது. ஆக. 3ல் ஆடிப்பெருக்கையொட்டி அன்னதானம் நடக்கிறது.