ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமன்னார் சயன சேவை உற்சவம்
ADDED :1245 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் ஏழாம் திருநாளில் சயன சேவை கிருஷ்ணர் கோயிலில் நேற்றிரவு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனை முன்னிட்டு நேற்று காலை ஆண்டாள், ரெங்க மன்னார் கோயிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் சுற்றி கிருஷ்ணன் கோயிலை வந்தடைந்தனர். அங்கு இரவு 8:00 மணிக்கு ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனதிருக்கோலத்தில் எழுந்தருளினர். கோயில் பட்டார்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயலாளர் முத்துராஜா, கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.