உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) - இலக்கை எட்டலாம்!

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) - இலக்கை எட்டலாம்!

மனசாட்சியை மதித்துநடக்கும் மேஷராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு ஏழாம் வீட்டில் அனுகூலக் குறைவாக உள்ளார். குரு, சுக்கிரன், சனியின் அமர்வு நற்பலன் தரும் வகையில் உள்ளது. செவ்வாயின் சப்தம பார்வை ராசியில் பதிவதால் உங்களின் செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்தபின் புதிய முயற்சியில் ஈடுபட்டால் வெற்றி அதிகரிக்கும். வீடு, வாகன வகையில் பெரிய அளவிலான மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம். புத்திரர்கள் தயக்கத்துடன் செயல்பட்டு அமைதியை இழப்பர். உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது. எதிரிகளின் ஏளனப் பேச்சைக் கருத்தில் கொள்ள வேண்டாம். தம்பதியர் கருத்து வேறுபாடுகளால் வாக்குவாதத்தில் ஈடுபடுவர். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் செலவு அதிகரிக்கும். தொழிலதிபர்கள் இடையூறுகளை சரிசெய்து உற்பத்தி, தரத்தினை உயர்த்துவர். புதிய ஒப்பந்தம் மூலம் தாராள லாபம் கிடைக்கும். வியாபாரிகள் சந்தைப்போட்டியை சமாளிக்கும் புதிய உத்திகளை பின்பற்றுவர். விற்பனை சீராகி எதிர்பார்த்த இலக்கை அடைவர். பணியாளர்கள் உடல்நலத்தை சரிவர பேணுவது நல்லது. எதிர் பார்த்த சலுகைப்பயன்கள் கிடைக்கப் பெறுவர். குடும்ப பெண்கள் கணவருடன் சிறு விஷயத்திற்காகவும் சச்சரவில் ஈடுபடுவர்.  பணிபுரியும் பெண்கள் உயரதிகாரிகளின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றுவது நன்மை தரும். சுயதொழில் புரியும் பெண்கள் மூலதனத்தை அதிகப்படுத்தி விற்பனையை மேம்படுத்துவர்.  அரசியல்வாதிகள் ஆதரவாளர்களிடம் செல்வாக்கும், எதிரியால் சிரமத்தையும் அடைவர். விவசாயிகள் தாராள மகசூல் கிடைக்கப் பெறுவர்.மாணவர்கள் கடின முயற்சியால் திட்டமிட்ட தேர்ச்சி இலக்கை அடைவர்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் வாழ்வில் சகல வளமும் கிடைக்கும்.
உஷார் நாள்: 24.8.12 காலை 8.10 - 26.8.12 காலை 10.34
வெற்றிநாள்: செப்டம்பர் 9, 10, 11
நிறம்: ரோஸ், வெள்ளை       எண்: 1, 6


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !