ரிஷபம் (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2) - உல்லாசம் உற்சாகம்!
திட்டமிட்டு செயல்பட்டு வளர்ச்சி காணும் ரிஷபராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மாதம் முழுதும் ராசிக்கு அனுகூலமாக இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் சஞ்சரிக்கிறார். புதன்,செவ்வாயின் அமர்வு வாழ்வு சிறக்க அளப்பரிய நற்பலன் வழங்கும் வகையில் உள்ளது. உங்கள் சிந்தனையில் தெளிவு உண்டாகும். உல்லாசமாகவும், உற்சாகமாகவும் பணியில் ஈடுபடுவீர்கள். வீடு, வாகனத்தில் திட்டமிட்ட வளர்ச்சிப்பணிகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். புத்திரர் ஒழுக்கத்துடன் நடப்பதோடு கல்வியிலும் முன்னேறுவர். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். தம்பதியர் மனதில் நிலவி வந்த கருத்து வேற்றுமை விலகி, ஒருவருக்கொருவர் பாசத்துடன் செயல்படுவர். குடும்ப தேவைக்கான வருமானம் சீராக கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனையைப் பின்பற்றி வளர்ச்சி காண்பீர்கள். தொழிலதிபர்கள் அக்கறையுடன் செயல்பட்டு நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்வர். புதிய ஒப்பந்தம் மூலம் லாபம் கூடும். வியாபாரிகள் புதிய சந்தை வாய்ப்பு கிடைப்பதன் மூலம் விற்பனை இலக்கை எட்டிப்பிடிப்பர். பணியாளர்கள் ஆர்வமுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரிடம் நற்பெயர் பெறுவர். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி நடந்தேறும். குடும்ப பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து நடப்பர். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணிகளை நிறைவேற்றுவர். சுயதொழில் புரியும் பெண்கள் எதிர்பார்த்த நிதியுதவி கிடைத்து வளர்ச்சிப்பணி புரிவர். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி கிடைக்கும்.. விவசாயிகள் நல்ல மகசூல் காண்பர். மாணவர்கள் படிப்பில் கவனம் கொள்வது நல்லது.
பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் திட்டமிட்டபடி குடும்பத்தில்சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
உஷார் நாள்: 26.8.12 காலை 10.34 - 28.8.12 பிற்பகல் 1.43
வெற்றி நாள்: ஆகஸ்ட் 17, செப்டம்பர் 21
நிறம்: நீலம், மஞ்சள் எண்: 3, 4