உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்

சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்

காளையார்கோவில்: காளையார்கோவில் சொர்ணவல்லி அம்மன் சமேத சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்தனர். சொர்ணகாளீஸ்வரர் கோயில் ஆடிப்பூர விழா ஜூலை 23 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழா நாட்களில் சுவாமியும் அம்மனும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனர்.ஏழாம் நாளான நேற்று காலை 10:00 மணிக்கு சொர்ணவல்லி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.ஏராளமான பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுத்தனர்.இன்று ஆடிப்பூர நிகழ்ச்சியும், நாளை (ஆக., 2) மாலை 6:00 மணிக்கு தபசு காட்சியும், ஆக.,3ல் காலை 11:00 முதல் 12:00 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்ச்சியும், ஆக., 4ல் விழா நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை காளீஸ்வர குருக்கள், சமஸ்தான தேவஸ்தான கண்காணிப்பாளர் பாலசரவணன், மேலாளர் இளங்கோ செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !