உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் தேரோட்டம்

ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் தேரோட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்தேரோட்டம் நடந்தது. இக் கோயிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழா ஜூலை 23ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

9ம் நாள் விழாவான நேற்று கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகி தேரில் எழுந்தருளியதும், மகா தீபாராதனை நடந்தது. கோயில் துணை ஆணையர் மாரியப்பன், கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், நகராட்சி தலைவர் நாசர்கான், கோயில் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், பேஸ்கார் கமலநாதன் பங்கேற்றனர்.தேரின் வடத்தை ஏராளமான பக்தர்கள் இழுத்து கோயில் ரத வீதியில் வலம் வர தேரோட்டம் உற்சாகமாக நடந்தது. காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை தேரோட்டம் நடந்த போது, பக்தர்கள் பாது காப்பு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஒரு போலீசார் கூட பணியில் இல்லாததால், ரதவீதியில் தாறுமாறாக நின்ற வாகனங்களால், தேரை இழுத்து சென்ற பக்தர்களுக்கு இடையூறாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !