உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் நாளை வெளியீடு

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் நாளை வெளியீடு

திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், வரும் 7 - 10ம் தேதி வரையிலான விரைவு தரிசன டிக்கெட், நாளை வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையானுக்கு அடுத்த வாரம் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்க உள்ளது. இதையடுத்து, 7 - 10ம் தேதி வரையிலான 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவை தேவஸ்தானம் நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் இந்த நான்கு நாட்களுக்கான விரைவு தரிசனத்திற்கான முன்பதிவு, நாளை காலை 9:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. மேலும், வருடாந்திர பவித்ரோற்சவத்தை முன்னிட்டு, 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோரின் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !