மிதுனம் (மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) - ஆடம்பரம் அவசியமா!
எந்த செயலிலும் தனி முத்திரை பதிக்கும் மிதுன ராசிஅன்பர்களே!
உங்கள் ராசிநாதன் புதன் மாறுபட்ட சூழ்நிலையில் ராசிக்கு மூன்றாம் இடத்தில் உள்ளார். இருப்பினும் சுக்கிரன், சூரியன், ராகு அளப்பரிய நற்பலன்களைத் தரும் விதத்தில் செயல்படுகின்றனர். அடுத்தவரின் ஆடம்பர செயலைக் கண்டு நீங்களும் பின்பற்றி சிலரது கேலிப்பேச்சுக்கு உள்ளாகும் கிரகநிலை உள்ளது. புத்திரர் உடல்நலக்குறைவை அடைவர். தகுந்த மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வது நல்லது. சொத்தின் பேரில் கடன் வாங்குபவர்கள் நம்பகமானவர்களிடம மட்டும் பெறுவது பாதுகாப்பானதாகும். ஆறாமிடத்தில் உச்சம் பெற்ற ராகு பணியில் சுறுசுறுப்பையும், தாராள வெற்றியையும் வழங்குவார். அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலம் உண்டு.தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொள்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். தொழிலதிபர்கள் சாதுர்யமாகச் செயல்பட்டு புதிய ஒப்பந்தங்களைப் பெறுவர். வியாபாரிகள் வாடிக்கையாளர் சேவையில் அக்கறை கொள்வர். கவர்ச்சிகரமாக முயற்சிகளில் ஈடுபட்டு லாபம் காண்பர். பணியாளர்கள் சகபணியாளர்களின் மத்தியில் செல்வாக்கு பெறுவர். சலுகைப்பயன் ஒரளவு கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் நல்ல குணங்களை மனதார பாராட்டுவர். ஒற்றுமை சிறந்து வீட்டில் மகிழ்ச்சி கூடும். குடும்பச் செலவுக்கான பணவசதி சீராக கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் ஒருமுகத் தன்மையுடன் செயல்பட்டு பணி இலக்கைப் பூர்த்தி செய்வர். நற்பெயரும் சலுகைப்பயனும் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையை சீராக்குவர். லாபவிகிதம் கூடும். எதிர்கால நலன் கருதி சேமிக்கவும் செய்வர். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். ஆதரவாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவர். விவசாயிகள் நல்ல மகசூல் பெறுவதோடு, கால்நடை வளர்ப்பிலும் ஆதாயம் காண்பர். மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் மட்டுமே எதிர்பார்த்த தரதேர்ச்சி கிடைக்கப் பெறுவர்.
பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் வாழ்வில் சிரமம் குறைந்து நன்மை அதிகரிக்கும்.
உஷார் நாள்: 28.8.12 பிற்பகல் 1.43 - 30.8.12 இரவு 6.29
வெற்றிநாள்: ஆகஸ்ட் 19, செப்., 14, 15
நிறம்: பச்சை, வெள்ளை எண்: 2, 5