பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :1159 days ago
திருநகர்: மதுரை திருநகர் மகாலட்சுமி நெசவாளர் காலனி வர சித்தி விநாயகர் கோயில் பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலில் ஆடிப்பூரம் உற்ஸவத்தை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது. ஜூலை 30ல் உற்சவ விழா துவங்கியது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று திருக்கல்யாணத்தை முன்னிட்டு காலை ஆண்டாள், பிரசன்ன வரதராஜ பெருமாளுக்கு அபிஷேகம் பூஜைகள் திருக்கல்யாண அலங்காரமாகி மூலவர் முன்பு எழுந்தருளினர். சுவாமிகளுக்கு மாலை மாற்றி திருக்கல்யாணம் முடிந்து ஊஞ்சல் சேவை நடந்தது. பக்தர்களுக்கு வளையல், அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகள் செய்தனர்.