வனபத்ரகாளியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
ADDED :1205 days ago
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலில், நேற்று, 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் திருவிழா, கடந்த மாதம், 19ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 26ம் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், 28ம் தேதி ஆடி அமாவாசை, பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது. உபயதாரர் கனகராஜ், செல்வமணி ஆகியோர் முன்னிலையில், பரம்பரை அறங்காவலர் வசந்தா, குத்துவிளக்கு பூஜையை, தீபம் ஏற்றி துவக்கி வைத்தார். சுப்ரமணியர் கோவில் அர்ச்சகர்கள் தனசேகர், கண்ணன் ஆகியோர் விளக்கு பூஜையை நடத்தினர். இதில், 108 பெண்கள் பங்கேற்றனர்.