செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு 2 லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு அங்காளம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் செய்தனர். உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து 2 லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.