தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவில் ஆடிப்பூர விழாவையொட்டி, மூலவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், அம்மனுக்கு நுாற்றுக்கணக்கான வளையல் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது . தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, பெரியநாயகி அம்மன் உடனாய பெருவுயைார், வாராஹி, முருகன்,விநாயகர் உள்ளிட்ட எல்லா மூலவமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆதாரணை நடைபெற்றது. இதில், பால், மஞ்சள், இளநீர்,கரும்புசாறு,நெய்,தேன் உள்ளிட்ட 16 மங்கல் பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், உலகம் அமைதி பெற வேண்டியும்,நீர்,நிலவளம் பெருக வேண்டியும், நல்ல மழை பெய்ய வேண்டியும் சிறப்பு அபிஷேக தீபாரதணை காண்பிக்கப்பட்டன. அத்துடன், நுாற்றுக்கணக்கான வளையல் கொண்டு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரினசம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானம் அதிகாரிகள் செய்து இருந்தனர்.