உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளையல் அலங்காரத்தில் வலம் வந்த சாரதாம்பாள்

வளையல் அலங்காரத்தில் வலம் வந்த சாரதாம்பாள்

கோவை, கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் ஆடி பூரத்தை ஒட்டி அம்பாளுக்கு லட்சம் வளையலால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய வளையல்களை கொண்டு சாரதாம்பாள் தேவிக்கு சுமார் 50,000 ஆயிரம் வளையல்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர அம்பாளுக்கு சேலை, கோபுர கலசம், தாமரை, கும்பம், வீணை முதலியவை கண்ணாடி வளையல்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஆடி மாதம் பூரம் நட்சத்திர நாளில் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்ட அம்மன்களை வழிபடுவது மிக சிறப்பு வாய்ந்த ஒன்று. சாரதாம்பாள் கோவிலில் இன்றைய தினத்துடன் நாளை இரவு 8 மணி வரை பக்தர்கள் அம்பாளை தரிசிக்கலாம். ஆகஸ்ட் 1 மற்றும் 2 தேதிகளில் வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த பின்னர் அலங்காரம் கலைக்கப்பட்டு அந்த வளையல்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதைத்தொடர்ந்து இக்கோவிலில் செப்டம்பர் மாதம் நவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !