திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் விழா
ADDED :1532 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வந்தது, பிரம்மோற்சவம் நிறைவு விழாவில், சிவகங்கை தீர்த்த குளத்தில், ஆடிப்பூரம் பராசக்தியம்மனுக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரியில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தீர்த்த குளக்கரையில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பராசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.