ஆடிப்பூர விழாவில் வளைகாப்பு : அம்மனுக்கு வளையல் அலங்காரம்
ADDED :1159 days ago
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா நடந்தது. முன்னதாக அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், மலர், வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பல்வேறு வகையான சித்ரான்னங்கள் (சாதம்) படையல் இடப்பட்டன. மகா தீபாராதனையுடன், சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் விழாவில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு, வளைகாப்பு நடத்தப்பட்டது. அன்னதானத்துடன் மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு மற்றும் கண்ணாடி வளையல்கள் வினியோகம் நடந்தது.
கன்னிவாடி: தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் ஆடிப்பூர சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு திருமஞ்சன அபிஷேகம், வாலை, சக்தி அம்மனுக்கு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
ரெட்டியார்சத்திரம்: கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில், கமலவல்லி, ஆண்டாளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடந்தது.