விருத்தாசலத்தில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
ADDED :1241 days ago
கடலூர் : விருத்தாசலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு கடந்த 23ம் தேதி விருத்தாம்பிகை அம்மனுக்கு கொடியேற்றம் நடந்தது. தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை 5:00 மணியளவில் சுவாமி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நூற்றுக்கால் மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளியதும், மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே திரண்டு வந்து தரிசனம் செய்தனர். முன்னதாக அதிகாலை 4:30 மணியளவில், விருத்தாம்பிகை சன்னதியில் சுவாமி அம்பாள் மாலை மாற்றும் வைபவம் நடந்தது.