கடலுார் பெருமாள் கோவில்களில் ஆடிப்பூரம் சிறப்பு பூஜை
ADDED :1304 days ago
கடலுார் : கடலுார் பெருமாள் கோவில்களில் ஆடிப்பூர உற்சவ சிறப்பு பூஜைகள் நடந்தது. கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஆடிப்பூர உற்சவத்தையொட்டி நேற்று காலை 7:30 மணிக்கு பெருமாள், ஆண்டாள், தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலை, தேவநாதன், ஆண்டாளுக்கு சேவை சாற்றுமுறை முடிந்து சிறிய தேரில் வீதியுலா நடந்தது. புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலிலும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் காலை 10:00 மணிக்கு வரதராஜர், ஆண்டாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை சிறப்பு அலங்காரத்தில் சாமி உள் புறப்பாடு நடந்தது.