உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூதக்குடி மலையாண்டி கோயில் திருவிழா : வேல்களுக்கு சிறப்பு பூஜை

பூதக்குடி மலையாண்டி கோயில் திருவிழா : வேல்களுக்கு சிறப்பு பூஜை

நத்தம், நத்தம் அருகே பூதக்குடி மலையாண்டி கோயில் திருவிழா நடந்தது.

பூதக்குடி அருகே சதுரகிரி மலையில் அமைந்துள்ளது மலையாண்டி கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் திருவிழா நடக்கும். கோயிலில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேல்களுக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. குழந்தை வரம் உள்ளிட்ட வேண்டுதல் நிறைவேற்றியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மொட்டை அடித்து வேல்களை காணிக்கையாக செலுத்தினர். இதில் பெண் பக்தர்கள் பலர் மடிச்சோறு பெற்று குழந்தை பாக்கியத்திற்காக வேண்டுதல் வைத்தனர். சிறப்பு பூஜைகளை அடுத்து அன்னதானம் நடைபெற்றது. இதில் நத்தம் சுற்றுவட்டாரம்,சிங்கம்புணரி, உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பூதக்குடி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !