உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் குட்டுப்பட்டி கரந்தமலை கருப்பசாமி கோவில் திருவிழா

நத்தம் குட்டுப்பட்டி கரந்தமலை கருப்பசாமி கோவில் திருவிழா

செந்துறை:நத்தம் அருகே குட்டுப்பட்டி கரந்தமலை கருப்பசாமி கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். குட்டுப்பட்டி கரந்தமலை கருப்பசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வளர்பிறையில் கோவில் திருவிழா மட்டும் கிடாவெட்டு நடைபெறும். விழாவையொட்டி காரணக்காரர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நள்ளிரவு கோயிலுக்கு சென்றனர். கோவிலில் உள்ள வேல்களுக்கு மாலைகளால் அலங்கரித்து பின் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் வேல்களை காணிக்கையாக அழித்தனர். பின் நள்ளிரவே 50க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு விடிய விடிய சமையல் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு அன்னதானம் நடந்தது. இதில் சுற்றுவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !