வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்
ADDED :1167 days ago
கடலுார் : கடலுார் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட பஞ்சமி தின வழிபாடு நடந்தது.
பெருமாளின் வாகனமாக கருட பகவானுக்குரிய ஒரு சிறப்பான நாள் கருட பஞ்சமி தினமாகும். அன்றைய தினத்தில், பெருமாள் கோவிலுக்கு சென்று கருடாழ்வாரையும், பெருமாளையும் வழிபடுபவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற நாக சர்ப்ப தோஷங்களின் நீங்கி நற்பலன்கள் உண்டாகும் என்பது ஐதீகம்.அந்த வகையில் கருட பஞ்சமி தினமான நேற்று, கருட ஸ்தலமான கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளியுள்ள வரதராஜபெருமாள் கோவிலில் பெருமாள் தாயார் மற்றும் கருட பகவானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. திரளான பக்தர்கள் கருட பகவான் சன்னதியில் வழிபட்டனர். அப்போது கருட பகவானுடன், பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.