கற்பக விநாயகருக்கு வெள்ளி கவசம் அணிவிப்பு
ADDED :1167 days ago
புதுச்சேரி : நெட்டப்பாக்கம் அடுத்த மொ.குச்சிப்பாளையம்- மொளப்பாக்கம் கோவிலில் உள்ள கற்பக விநாயகருக்கு வெள்ளி கவசம், திருவாச்சி அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது. மொ.குச்சிபாளையம் -மொளப்பாக்கம் கிராமத்தில் கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கற்பக விநாயகருக்கு நேற்று முன்தினம் வெள்ளிக் கவசமும், திருவாச்சியும் அணிவிக்கப்பட்டது.இதனையொட்டி கணபதி ஹோமம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிவகாமி முத்தையன், குமார் லட்சுமி குடும்பத்தினர் செலவில் கற்பக விநாயகருக்கு வெள்ளி கவசம், திருவாச்சி அணிவிக்கப்பட்டது.