ஆடி பெருக்கில் பண்ணாரியில் குவிந்த பக்தர்கள்
ADDED :1165 days ago
ஈரோடு : தமிழகத்தின் பிரசித்த பெற்ற கோவில்களில் ஒன்றான பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி பெருக்கையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரிஅம்மன் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.ஆடி18 என்பதால் திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டும், முடிகாணிக்கை செலுத்தியும் சென்றனர். ஈரோடு, திருப்பூர், புளியம்பட்டி, பவானிசாகர், சத்தியமங்கலம், அவிநாசி, சேலம், அந்தியூர், உள்ளிட்ட ஊர்களிலிருந்து 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.