உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோயிலில் கலைத்திறப்பு விழா

மாரியம்மன் கோயிலில் கலைத்திறப்பு விழா

பெரிய பட்டினம்: பெரியபட்டினம் அருகே தோப்புவலசையில் மாரியம்மன் கோயில் முளைப்பாரி உற்ஸவ விழா கடந்த ஜூலை 27 அன்று நிறைவு பெற்றது. கலைத்திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று மாலை 4 மணி அளவில் மூலவர் மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு, நெய்விளக்கு எடுத்து வந்து நேர்த்திக்கடன் பூஜைகளை கோயில் முன்பு செய்தனர். பெண்கள் கூட்டு பொங்கலிட்டனர். ஏற்பாடுகளை தோப்புவலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !