உத்தரகோசமங்கையில் 1008 விளக்கு பூஜை
ADDED :1166 days ago
உத்தரகோசமங்கை, ஆக.3- உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் விவேகானந்த கேந்திரத்தின் சார்பில் 1008 விளக்கு பூஜை நடந்தது. கேந்திர தொண்டர் சங்கரி வரவேற்றார். விவேகானந்த கேந்திரத்தின் அகில பாரத உதவி தலைவர் அனுமந்த ராவ், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பி.கே. மணி, விவேகானந்த கேந்திரம் கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் ஐயப்பன், மாவட்ட பொறுப்பாளர் சகுந்தலா உள்ளிட்ட தன்னார்வ தொண்டர்கள் பூஜையில் பங்கேற்றனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பூஜையில் கலந்து கொண்டனர். திருமாங்கல்ய பூஜை, சக்தி ஸ்தோதிரம், நாமாவளி, பஜனை, ஆன்மிக சொற்பொழிவு, மாதர் மாநாடு உள்ளிட்டவைகள் நடந்தது.