கண்ணகி தேவி கோயிலில் ஆடிப்பெருக்கு விழா
ADDED :1164 days ago
கூடலுார்: லோயர்கேம்ப் அருகே பளியன்குடி மங்களநாயகி கண்ணகி தேவி கோயிலில் 16-ம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு அதிகாலையில் இருந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பரிவார தெய்வங்களான பெரியகருப்பன், முனீஸ்வரர், கழுவடிக்கருப்பன், அதர்வன பேச்சியம்மன், ஆகாச ராக்காச்சியம்மனுக்கு சக்திகெடாவெட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. லோயர்கேம்ப், கூடலுார், கம்பம், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பூஜாரி கந்தவேல் நவரசி மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.