உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலாதிரிபுரசுந்தரி கோவிலில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்

பாலாதிரிபுரசுந்தரி கோவிலில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்

புதுச்சேரி : ஆடிப்பெருக்கை முன்னிட்டு, இரும்பை, ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் 108 குட மஞ்சள் அபிஷேகம் நடைபெற்றது.

புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், இரும்பை டோல்கேட் அருகில் உள்ள ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் நேற்று ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. அதனையொட்டி நேற்று காலை பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு 108 குட மஞ்சள் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை 6.00 மணிக்கு மேல் மூலவர் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் அம்பாள் தேர் உள் புறப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !