பழநி சண்முக நதியில் ஆடிப்பெருக்கு ஆரத்தி பெருவிழா
ADDED :1163 days ago
பழநி: பழநி,சண்முக நதி தூய்மை மற்றும் வழிபாட்டு குழு சார்பில் ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
பழநி சண்முக நதியில் பழநி - சண்முக நதி தூய்மை மற்றும் வழிபாட்டு குழு சார்பில் ஆடிப்பெருக்கு ஆரத்தி பெரு விழா நடைபெற்றது. இதில் மகாதீபாரணை பிராங்கு சங்க சாலக் ஆடலரசு தலைமையில் சண்முக நதிக்கு நடைபெற்றது. மேலும் கோபூஜை, கன்னி பூஜை, சுமங்கலி பூஜைகள் நடைபெற்றன. பெண்கள் வேண்டுதல்களை நினைத்து தீபங்களை சண்முக நதிஆற்றில் சேர்த்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் மேகாலய ஆளுநர் சண்முகநாதன், பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், சித்தநாதன் அண்ட் சன்ஸ் விஜயகுமார் கந்த விலாஸ் பாஸ்கரன் சாய் மருத்துவமனை சுப்புராஜ், அரிமா சங்க அசோக்குமார் உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.