உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சுவாமி வீதியுலா

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சுவாமி வீதியுலா

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உற்சவர் சுவாமி வீதியுலா நடந்தது.

ரிஷிவந்தியத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி 18 அன்று, கோவில் பணியாளர்கள் சார்பில் சுவாமி வீதியுலா நடைபெறும்.இதையொட்டி நேற்று காலை மூலவர் மற்றும் உற்சவர் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து, காலை 10:00 மணியளவில் உற்சவர் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரரை நந்தி வாகனத்தில் எழுந்தருளச் செய்து, மாடவீதி வழியாக சுவாமி வீதியுலா நடந்தது. கோவில் குருக்கள் நாகராஜ், சோமு ஆகியோர் பூஜைகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !