உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொண்டியாற்றில் மயிலம் சுப்ரமணிய சுவாமிக்கு தீர்த்தவாரி

தொண்டியாற்றில் மயிலம் சுப்ரமணிய சுவாமிக்கு தீர்த்தவாரி

மயிலம் : மயிலம் அருகே உள்ள செண்டூர் தொண்டியாற்றில் நடந்த ஆடிப்பெருக்கு விழாவில் மயிலம் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு தீர்த்தவாரி நடந்தது.

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நேற்று மதியம் 12:00 மணிக்கு மயிலம் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமி மயிலம் மலைக் கோவிலிலிருந்து புறப்பாடு நடந்தது. செண்டூர் கிராமத்திற்குச் சென்று அங்குள்ள தொண்டி ஆற்றில் சுவாமிக்கு தீர்த்த வாரி நடந்தது.மாலை 5:30 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.இரவு சுவாமி வீதியுலாவைத் தொடர்ந்து சுவாமி மீண்டும் மலைக் கோவிலை வந்தடைந்தது.ஏற்பாடுகளை மயிலம் ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !