திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை
ADDED :1164 days ago
திருவட்டார்: திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று (4ம் தேதி) நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது. திருவட்டார் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள முனிக்கல் மடம் நந்தவனத்தில் காலை 5 மணி அளவில் நெற்கதிர்களை வைத்து அங்கு பூஜைகளைத் தொடர்ந்து ஊர்வலமாக ஆதிகேசவபெருமாள் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளும் ஆதிகேசவபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி விக்ரகங்கள் முன்பு அவை சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பூஜைகளுக்கு பின்னர் சந்தனபிரசாதத்துடன் நெற்கதிர்களும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.