முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா
ADDED :1166 days ago
பெரியபட்டினம்: பெரியபட்டினம் அருகே சிட்டாங்காடு கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை 5 மணி அளவில் சிட்டாங்காடு முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து கரகம், நேர்த்திக்கடன் பக்தர்களுடன் முளைப்பாரி சுமந்த பெண்கள் மேதலோடை பெரிய ஊரணியில் பாரியை கங்கை சேர்த்தனர்.