உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பெருக்கு விழா அன்னூர் கோவில்களில் கோலாகலம்

ஆடிப்பெருக்கு விழா அன்னூர் கோவில்களில் கோலாகலம்

அன்னூர்: ஆடிப்பெருக்கை முன்னிட்டு அன்னூரில் கோவில்களில் அதிக அளவில் மக்கள் குவிந்து வழிபாடு செய்தனர்.

ஆடிப்பெருக்கு நாள் அன்று பலரும் கோவில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். நேற்று அன்னூர் வட்டாரத்தில் உள்ள கோவில்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அன்னூர், மாரியம்மன்  கோவிலில் அம்மன் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஓதிமலை ரோட்டில் உள்ள பெரிய அம்மன் கோவிலில் அதிக அளவில் மக்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். மன்னீஸ்வரர்  கோவில், கரிவரதராஜ பெருமாள் கோவில், பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில், எல்லப்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில்  திரண்டு வழிபாடு செய்தனர். கோவில்பாளையம் அருகே அக்ரஹார சாமக்குளத்தில் உள்ள 165 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்தில் விரைவில் அரசின் உதவி கிடைக்கப்பெற்று தூர்வாரி புனரமைப்பு பணிகள்  முடித்து நீரால் நிரம்ப வேண்டி, ஏரியில் குழந்தைகளுடன் மலர்களை தூவி வழிபாடு செய்யப்பட்டது. குளம் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்கள் வையம்பாளையம் கோகில வாணி,  சிவகுருபாலன், மாதேஸ்வரன், திருமலைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !