உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மண்டல பூஜை

மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மண்டல பூஜை

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே கள்ளிவேலிப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக 48ம் நாள் நிறைவு மண்டல பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் நேற்று காலை கணபதி  ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜை, வழிபாடுகள் செய்தனர். கலசங்களில் நிரப்பப்பட்ட புனித நீரால் அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.  பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !